என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » லோகேஸ் ராகுல்
நீங்கள் தேடியது "லோகேஸ் ராகுல்"
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார். #HardikPandya #BCCI #LokeshRahul
புதுடெல்லி:
இவ்விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கிடையே என்னுடைய கருத்துகள் எந்த வகையிலாவது யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் அவமதிக்க வேண்டும் என்பதோ, யாருடைய மனதையும் காயப்படுத்த வேண்டும் என்பதோ எனது நோக்கமில்லை என்று ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த சர்ச்சை எதிரொலியாக கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. #HardikPandya #BCCI #LokeshRahul
இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவிஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்டனர். அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இவ்விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கிடையே என்னுடைய கருத்துகள் எந்த வகையிலாவது யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் அவமதிக்க வேண்டும் என்பதோ, யாருடைய மனதையும் காயப்படுத்த வேண்டும் என்பதோ எனது நோக்கமில்லை என்று ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த சர்ச்சை எதிரொலியாக கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. #HardikPandya #BCCI #LokeshRahul
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்டில் லோகேஸ் ராகுல் ஆடக்கூடாது என்றும், அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul
புதுடெல்லி:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
அடிலெய்டில் நடந்த பரபரப்பான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் 4 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
மேலும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற சுழற்பந்து வீரர் லயன் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட் கைப்பற்றி மிகுந்த நெருக்கடியை கொடுத்தார்.
இந்த நிலையில் வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளர். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. இதனால் அணிக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது.
அணி வெற்றி பெற வேண்டுமானால் வீரர்கள் தேர்வு முறை சரியாக இருக்க வேண்டும்.
அணியின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வழிமுறைகளை நிர்வாகம் அறிய வேண்டும். சுமித், வார்னே இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல இயலவில்லை என்றால் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். தேர்வு குழு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.
பணக்கார அமைப்பான பி.சி.சி.ஐ.யால் 40 பேர் கொண்ட அணியை கூட அனுப்ப முடியும். ஏராளமான வீரர்கள் மீண்டும் வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.
எஞ்சிய 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul

பெர்த் டெஸ்டில் கேப்டன் விராட்கோலி மற்றும் அணி நிர்வாகத்தின் முடிவு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. முதன்மை சுழற்பந்து வீரரான ஜடேஜாவை சேர்க்காமல் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. அதனால் ஆஸ்திரேலியா ரன்களை வாரி குவித்தது. இது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.
மேலும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற சுழற்பந்து வீரர் லயன் சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட் கைப்பற்றி மிகுந்த நெருக்கடியை கொடுத்தார்.
இந்த நிலையில் வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளர். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடக்கிறது. இதனால் அணிக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது.
அணி வெற்றி பெற வேண்டுமானால் வீரர்கள் தேர்வு முறை சரியாக இருக்க வேண்டும்.
அணியின் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வழிமுறைகளை நிர்வாகம் அறிய வேண்டும். சுமித், வார்னே இல்லாத ஆஸ்திரேலிய அணியை வெல்ல இயலவில்லை என்றால் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். தேர்வு குழு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.
பணக்கார அமைப்பான பி.சி.சி.ஐ.யால் 40 பேர் கொண்ட அணியை கூட அனுப்ப முடியும். ஏராளமான வீரர்கள் மீண்டும் வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்.
முதலில் திருப்பி அனுப்பப்பட வேண்டிய வீரர் லோகேஷ்ராகுல். எஞ்சிய 2 டெஸ்டில் அவர் விளையாடக் கூடாது. ரஞ்சி கோப்பைக்கான கர்நாடக அணிக்கு வந்து ஆட வேண்டும்.
எஞ்சிய 2 டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார். #AUSvIND #SunilGavaskar #KLRahul
×

X